புத்தாண்டை முன்னிட்டு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. விமான நிலையம் அளித்த தகவலின்படி, ஜனவரி 10 ஆம் தேதிவரையில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பயணிகள் துபாய் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது விமான நிலையம். அதுமட்டுமல்லாமல், செல்லுபடியாகும் விமான டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே டெர்மினலுக்குள் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரான பயணத்தை மக்களுக்கு உறுதி செய்யும் விதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.