துபாயின் முக்கிய அம்சங்களுள் ஒன்று நள்ளிரவு பார்ட்டிகள். அதுவும் உல்லாச சொகுசுக் கப்பலில் நடைபெறும் பார்ட்டியில் பங்கேற்க பல்வேறு நாட்டிலிருந்து துபாய் வரும் சுற்றுலாப் பயணிகளும் விரும்புகின்றனர்.
ஆடம்பரமாய் நடைபெறும் இம்மாதிரி பார்ட்டிகள் சில நேரங்களில் ஆபத்தையும் அழைத்து வருபவை. அப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு துபாயில் நடைபெற்ற படகுப் பார்ட்டியின் போது திடீரென மூழ்கத் துவங்கியிருக்கிறது.
இதனால் உடனடியாக பார்ட்டியில் இருந்த பிரகஸ்பதிகளை அவசர அவசரமாக வெளியேற்றியிருக்கிறது மீட்புக்குழு. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.
People at a boat party were safely disembarked as it began to sink on Friday evening in Dubai. pic.twitter.com/vCx98DJqmy
— Lovin Dubai | لوڤن دبي (@lovindubai) November 5, 2021