ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கண்பார்வையற்றோர் பாதுகாப்பு தினம் (International White Cane Day) கொண்டாடப்படுகிறது. பார்வைத் திறனை இழந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் சுதந்திரமாக பொது இடங்களுக்குப் பயணிப்பதை உறுதி செய்யவும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளின் உரிமை பாதுகாப்புத்துறையின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகமது அல் மக்தூம், கண்பார்வையை இழந்த நபர்களை துபாய் எக்ஸ்போ 2020 சிட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கண்பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கின்றன. கண்பார்வையை இழந்தாலும் சமூகத்தின் சக உறுப்பினர்களான அம்மக்களை கைகளைக் கோர்த்துக்கொண்டு மன்சூர் சென்றது காண்போரை நெகிழ வைத்தது.
On the occasion of International White Cane Day, HH Sheikh Mansour bin Mohammed bin Rashid Al Maktoum, Chairman of the Higher Committee for the Protection of the Rights of People of Determination led the White Cane March. pic.twitter.com/yiNcMIiNrP
— Expo 2020 Dubai (@expo2020dubai) October 16, 2021
உலக கண்பார்வையற்றோர் பாதுகாப்பு தினம்
முதன்முதலாக 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபரான லிண்டன் ஜான்சன் இதற்கான முன்னெடுப்பை எடுத்தார். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி உலக பார்வையற்றோர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
