UAE Tamil Web

துபாய் கேன் திட்டத்தால் 117,000 லிட்டர் தண்ணீரை பயன்படுத்திய மக்கள்

துபாயில் இலவச தண்ணீர் வழங்கும் துபாய் கேன் திட்டத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு 500 மி.லி. சமமான அளவை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் துபாய் முழுவதும் பிப்ரவரி 15 அன்று துவங்கப்பட்டது. இலவச தண்ணீர் வழங்கும் துபாய் கேன் திட்டத்தின் மூலம் 117,000 லிட்டர் தண்ணீரை மக்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 புதிய துபாய் கேன் திட்டம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நகரம் முழுவதும் துபாய் கேன் 39 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துபாய் கேன் திட்டம்:

  • ஜுமைரா – 2
  • சன்செட் பீச் -1
  • JBR – 1
  • அல் சஃபா பார்க் – 1
  • முஷ்ரிஃப் தேசிய பூங்கா -1

இத்தகைய இடங்களில் துபாய் கேன் நிறுவப்பட்டுள்ளன.

அமீரக குடியிருப்பாளர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை பெரிதும் குறைக்க துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமால் இந்த துபாய் கேன் திட்டம் துவங்கப்பட்டது.

துபாயில் டிசம்பர் 2022க்குள் 50 இடங்களில் துபாய் கேன்களை அமைக்கபடவுள்ளதாக துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையான (DET) சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளின் நிர்வாக இயக்குநர் யூசுப் குறியுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap