UAE Tamil Web

ஸ்புட்னிக், பைசர் தடுப்பூசிகளை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி – ஆனால் இவர்களுக்கு மட்டும்தான்..!

covid

பைசர் பையோஎன்டெக், ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த அமீரக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி,

  • 60 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்
  • 50-59 வயதுடைய நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள்.
  • 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் நீண்ட நாள் சுகாதார மையங்களில் தங்கி சிகிச்சை பெறுவோர்

– ஆகியோர் உடனடியாக இந்த தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்ட 6 மாதம் கழிந்த பின்னர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அமீரக சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.

சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு பின்னர் பைசர் அல்லது ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இந்நடைமுறை பொருந்தாது என்பது முக்கியமாகும்.

பல்வேறுகட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக எளிதில் அவர்களை கொரோனாவின் பிடியிலிருந்து காக்க முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

covid
1 Share
Share via
Copy link