UAE Tamil Web

2800 வண்ண விளக்குகளால் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் அபுதாபி – ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு நகராட்சி மேற்கொண்ட சிறப்பு ஏற்பாடு..!

Eid Al Adha

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு அபுதாபி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 2800 வண்ண விளக்குகளை அபுதாபி நகராட்சி நிறுவியுள்ளது. அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வண்ணத்துப்பூச்சிகள், கப்பல்கள் மற்றும் அரேபிய தேநீர் குடுவை போன்ற வடிவங்களில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அபுதாபிக்கு வரும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமான கார்னிச் பகுதியில் அற்புதமான வண்ணங்களில் இந்த விளக்குகள் மிளிர்கின்றன.

கொரோனா காலமாக இருந்தாலும் மக்களிடையே மகிழ்ச்சியை விதைப்பதை நோக்கமாகக்கொண்டு அபுதாபி நகராட்சி இந்த திட்டங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Eid Al Adha
0 Shares
Share via
Copy link