UAE Tamil Web

புகைப்படத் தொகுப்பு: இன்றும் 5 வேளையும் தொழுகை நடைபெறும் அமீரகத்தின் 200 வருட பழமையான மசூதி..!

200 year old Mosque (2)

ராஸ் அல் கைமாவில் அரேபியன் கடலும் மலைப்பகுதியும் இணையும் இடத்தில் கம்பீரமாக நிற்கிறது இந்த 200 ஆண்டுகால பழைமையான மசூதி. 1777 – 1803 ஆம் ஆண்டு காலத்தில் ராஸ் அல் கைமாவை ஆண்ட ஷேக் சக்ர் பின் ரஷீத் அல் காசிமி அவர்களால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

மசூதிக்குள் நீங்கள் நுழைந்தவுடனேயே உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது இதன் கட்டிடக்கலையும் பராமரிக்கப்பட்டுவரும் விதமுமே ஆகும். மசூதியின் வெளிப்புறப் பகுதியானது பிளாஸ்டர், பவள கற்கள் மற்றும் கடற்கரை பாறைகள் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது.

இம்மசூதியின் மேற்கூரையானது பனை மரங்கள் மற்றும் விதானத்தால் மூடப்பட்டுள்ளது. 60 தூண்களைக் கொண்ட இந்த மசூதியின் உள்ளே, ஒரே நேரத்தில் 1000 பேர் தொழுகை நடத்தலாம்.

மசூதி அதன் இருபுறமும் 31 வளைவு ஜன்னல்கள், மலை கற்களால் மூடப்பட்ட நடைபாதை மற்றும் கிழக்கு தளத்தில் மூன்று பெரிய மர கதவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்றும் இந்த மசூதியில் 5 வேளை தொழுகையும் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையும் நடத்தப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச சபையின் உறுப்பினரும் ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்களுடைய உத்தரவின்பேரில் மறுசீரமைக்கப்பட்டது. வாய்ப்புள்ளோர் நிச்சயம் இந்த மசூதிக்குச் சென்றுவாருங்கள்.

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)

200 year old Mosque (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap