UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா தொழுகையில் ஈடுபட்ட அமீரக ஆட்சியாளர்கள் – சிறப்பு புகைப்படத் தொகுப்பு..!

sheikh

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு அமீரகம் முழுவதிலும் உள்ள மசூதிகளில் இன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் குடியிருப்பாளர்கள், குடிமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோல எமிரேட்களின் ஆட்சியாளர்கள் அந்தந்த எமிரேட்களில் உள்ள மசூதிகளில் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அபுதாபி

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் தொழுதார்.

 

View this post on Instagram

 

A post shared by Khalifa Saeed (@khalifasaeed)

துபாய்

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அவரது சகோதரர் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் ஸபீல் பகுதியில் உள்ள ஷேக் ரஷீத் பின் சயீத் மசூதியில் தொழுதனர்.

ராஸ் அல் கைமா

உச்ச சபையின் உறுப்பினரும் ராஸ் அல் கைமா ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி தனது மகனும் ராஸ் அல் கைமாவின் பட்டத்து இளவரசருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்களோடு ஈத் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டார்.

அஜ்மான்

அஜ்மானின் பட்டத்து இளவரசரும் அஜ்மான் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி அஜ்மானின் அல் ஸகேர் மசூதியில் தொழுதார்.

உம் அல் குவைன்

உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைன் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா தனது மகன் ஷேக் ரஷீத் பின் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா அவர்களுடன் ஷேக் அகமது பின் ரஷீத் அல் முவல்லா மசூதியில் தொழுதனர்.

sheikh
0 Shares
Share via
Copy link