UAE Tamil Web

துபாயில் நாளை இலவச கேன்சர் பரிசோதனை முகாம் – முன் அனுமதி தேவையில்லை..!

pink caravan

ப்ரெஸ்ட் கேன்சர் எனப்படும் மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வாழ்க்கையில் வென்ற பெண்கள் நிறையப்பேர் உண்டு. அதற்கு சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதலும் சிகிச்சைக்கு உடன்படுதலும் மிக முக்கிய படி நிலைகளாகக் கருதப்படுகிறது.

அப்படி, பெண்கள் இலவசமாக கேன்சர் பரிசோதனை மேற்கொள்ள உதவ இருக்கிறது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் கேன்சர் பேஷண்ட்ஸ் அமைப்பு. நாளை (29/10/2020) துபாய் ஃபிரேமில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் கேரவனில் சிறப்பு கேன்சர் பரிசோதனை முகாம் நடத்தப்பட இருக்கிறது.

இந்த இலவச முகாமில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். மேலும், இதற்காக எவ்வித முன்னனுமதியும் பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச முகாம் நாளை காலை மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையில் நடைபெற இருக்கிறது. இதன்மூலம் பல பெண்கள் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.

pink caravan
0 Shares
Share via
Copy link