UAE Tamil Web

அமீரகத்தில் இன்று தெரியும் பிங்க் மூன் (Pink Moon) காணத்தவறாதீர்கள்..!

Cold Moon

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பிங்க் மூன் என்றால் பிங்க் நிறத்தில் தெரியும் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. ஆமாம். வழக்கத்தைவிட இன்று நிலவு சற்றே பெரிதாகக் காட்சியளிக்கும். அப்பறம் எதற்கு அப்படியொரு பெயர் எனக் கேள்வி கேட்கலாம் என்று தோன்றுமே?

அமெரிக்காவைச் சேர்ந்த அல்மனாக் என்னும் விவசாயி 1930 களில் ஒவ்வொரு மாதமும் நிலவு தோன்றும் விதத்தை வைத்து ஒவ்வொரு பெயர் வைத்திருக்கிறார். அப்படி ஏப்ரல் மாதத்தில் தெரியும் நிலவிற்கு பிங்க் மூன் எனப் பெயரிட்டிருக்கிறார் அல்மனாக். அப்படி அமெரிக்கா பக்கமாக இருந்து வந்ததுதான் இந்தப் பெயர்.

பிங்க்கும் இல்ல.. பிளாக்கும் இல்ல இதற்குப் பெயர் சூப்பர் மூன் என்று 1979 ஆம் ஆண்டு புகழ்பெற்ற வானியல் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் நொல்லே அறிவித்தார். வழக்கமான அளவை விட பெரிதாகத் தெரியும் என்றுதான் அவரும் சொல்லியிருக்கிறார். ஆகவே, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை அழைக்கலாம்.

இதேபோல அடுத்தமாதம் 27 ஆம் தேதியும் இந்த சூப்பர் மூன் தோன்ற இருக்கிறது. ஆகவே இந்த வருடத்திற்கு இரண்டு சூப்பர் மூன் தோன்ற இருக்கிறது மகிழ்ச்சியான செய்திதான். அடுத்தமாதம் பூமி மற்றும் நிலவுக்கு இடையேயான தூரத்தில் 157 கிலோமீட்டர்கள் குறையும். ஆகவே நிலவு வழக்கத்தைவிட 0.04 சதவீதம் பெரிதாகத் தெரியும்.

எப்படி பார்ப்பது?

வானத்தை அண்ணார்ந்து பார்த்தாலும் நிலவு தெரியத்தான் போகிறது என்று நினைக்கவேண்டாம். நிலவின் அழகை துல்லியமாக ரசிக்க விரும்புவோர் அல் துராயா வானியல் மையம் அமைந்துள்ள மஷ்ரிப் பார்க்கிற்கு செல்லுங்கள். அங்கே இப்பகுதியிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியின் ஒரு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடி வழியாக நீங்கள் நிலவைப் பார்க்கலாம்.

Cold Moon
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap