UAE Tamil Web

அபுதாபியில் கண் வங்கியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி.!

eye

அமீரகத்தின் முதல் மாற்று மையமான(transplant centre) ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி (SKMC), அபுதாபியில் ஒரு கண் வங்கியை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது பற்றி கூறியுள்ள SKMC-ன் ஆலோசகர் கண் மருத்துவர் டாக்டர் முராத் அல் ஒப்தானி, தற்போது எங்களது மருத்துவ மையம் அதன் கண் மாற்று அறுவைசிகிச்சை நடைமுறைகளுக்காக, அமெரிக்க கண் வங்கி ஒன்றிலிருந்து கருவிழிப் படலம்(cornea-கார்னியா) அடுக்குகளைப் பெறுகிறது.

- Advertisment -

இந்நிலையில் நாங்கள் தற்போது அபுதாபியில் ஒரு கண் வங்கியை நிறுவ முடிவு செய்துள்ளோம். இது அமீரக மருத்துவமனைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும். SKMC ஆண்டுக்கு 40 என்ற விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறது. இந்த ஆண்டு கார்னியா மாற்று சிகிச்சை செய்து கொண்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் 15% குழந்தைகள் என்றார்.

கார்னியா மாற்று சிகிச்சைக்கான வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது, ஆனால் நோயாளிகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வழக்கமான சோதனைகள் தேவைப்படும் என்று டாக்டர் அல் ஒப்தானி கூறினார். கார்னியா மாற்று அறுவை சிகிச்சை என்பது முதல் படி. அதன்பிறகு நோய்த்தொற்றுகள், அதிக உள்விழி அழுத்தம் போன்ற சிக்கல்களை தடுக்க கவனமும், நீண்ட காலத்திற்கு மருத்துவ பரிசோதனைகளும் அவசியம்.

கார்னியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு தெளிவான பார்வையை தக்கவைக்க அவசரகால மறுவாழ்வு மற்றும் கவனிப்பு தேவை என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.