UAE Tamil Web

பிளாஸ்டிக் பைகளுக்கு இனி கட்டாய கட்டணம்.. புதிய முன்னெடுப்பை நோக்கி நகரும் அமீரகம் – எப்போது? முழு விவரம்

வரும் ஜூலை 1 முதல், பிளாஸ்டிக், காகிதம், மக்கும் பிளாஸ்டிக் மற்றும் தாவர அடிப்படையிலான மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பைகளுக்கு 25 ஃபில்ஸ் கட்டாயக் கட்டணம் விதிக்கப்படும் என்று துபாய் நகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

சுமார் 57 மைக்ரோமீட்டர் தடிமன் கொண்ட பைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நகராட்சி சமீபத்தில் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் பட்டியலில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

பிளாஸ்டிக் பைகளின் தடிமன் தான் அதன் வலிமையை தீர்மானிக்கிறது, ஆகவே தடிமனான பிளாஸ்டிக், அதிக விலைக்கு விற்கப்படும்.

“பிளாஸ்டிக், காகிதம், மக்கும் பிளாஸ்டிக் மற்றும் தாவர அடிப்படையிலான மக்கும் பொருட்களால் செய்யப்பட்ட பைகள் உட்பட 57 மைக்ரோமீட்டருக்கும் குறைவான தடிமன் கொண்ட ஒவ்வொரு பைக்கும் வணிக விற்பனை நிலையங்களில் 25 ஃபில்கள் வசூலிக்கப்படும்” என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் உள்ள அனைத்து கடைகளும் இந்த ஒருமுறை பயன்படுத்தும் பைகளுக்கு 25 ஃபில்ஸ் கட்டணத்தை கட்டாயம் விதிக்க வேண்டும். உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக நுகர்வோரின் பிளாஸ்டிக் பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆகவே இலவச பைகளை வழங்க கடைகள் ஊக்குவிக்கப்படாது என்றும் நகராட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap