UAE Tamil Web

துபாய் DP WORLD வாங்கிய P&O FERRIES நிறுவனத்தின் 800 பணியார்கள் அதிரடி நீக்கம்.. போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..!

இங்கிலாந்தில் இயங்கி வரும் ‘P&O Ferries’ என்னும் படகு நிறுவனம் 800 பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியுள்ளது. இதனால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

துபாயில் இயங்கிவரும் DP World நிறுவனம் 332 மில்லியன் பவுண்டுகளுக்கு P&O நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. 103 நாடுகளில் சேவையை வழங்கிவரும் இந்த நிறுவனத்தை துபாய் சுங்கத் துறையின் தலைவரான சுல்தாக அகமது பின் சுலேம் வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று P&O நிறுவனத்தின் 800 பணியாளர்களுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பி வேலையில் இருந்து நீக்குவதாக் கூறி, பணியாளர்களின் இறுதி வேலை நாள் இன்று என அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னெசரிக்கை அறிவிப்பு கொடுக்காததன் காரணமாக இழப்பீடு வழங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

வேலையை விட்டு நீக்கியதால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல ஊழியர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

P&O நிறுவனம் வருடத்திற்கு 100 மில்லியன் பவுண்டுகள் நஷ்டத்தில் இயங்கி வருவதகாவும், இச்சூழலை தாக்குப் பிடிக்கவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று P&O நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap