UAE Tamil Web

அமீரக தேசிய பணத்தை அவமதித்த இளைஞர்.. வைரலான வீடியோ.! அதிரடியில் இறங்கிய போலீஸ்

UAE curreny

அமீரகத்தின் தேசிய பணத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், வளைகுடாவை சேர்ந்த குடிமகன் ஒருவரை உம் அல் குவைன் காவல்துறை கைது செய்துள்ளது.

- Advertisment -

அமீரக தேசிய பணத்தை வளைகுடா குடிமகன் அவமதிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அமீரக தேசிய பணத்தில் நாட்டின் பெயர், சின்னம் இடம்பெற்றுள்ளது. இதனால் பணத்தின் மதிப்பை விட அதன் நன்மதிப்பு அதிகம். எனவே அமீரக பணத்தை அவமதிப்பது அமீரக சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

இதனிடையே அரசு தரப்பின் அனுமதியுடன் குற்றச்சாட்டுக்குள்ளான வாலிபரின் அடையாளம் மற்றும் வசிப்பிடத்தை சைபர் பிரிவு காவலர்கள் கண்காணித்து பின்னர் கைது செய்தனர். தேசிய நாணயத்தை அவமதித்த புகாரை கைது செய்யப்பட்ட இளைஞன் ஒப்பு கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பிரிகேடியர் ஹூமைட் மட்டர் (Brigadier Humaid Mattar) கூறியுள்ளார்.

இதனை அடுத்து கைதான வாலிபர் சட்ட நடவடிக்கைகளுக்காக பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் 2012 ஆம் ஆண்டிற்கான சைபர் கிரைம் எதிர்ப்பு பெடரல் தண்டனை சட்ட எண் (5) ஆர்டிகிள் (5) இன் படி சட்ட நடவடிக்கைகளுக்காக, அரசு வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதே சட்டத்தின் பிரிவு (29)-ன் படி, நாட்டையோ அல்லது அதன் எந்தவொரு நிறுவனத்தையோ இழிவுபடுத்தும் அல்லது குறைத்து மதிப்பிடும் எந்தவொரு செயலிலும் ஈடுபடும் எவருக்கும், சிறை தண்டனை (தீர்மானிக்கப்படாத அளவு) மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும்.

முன்னதாக இந்த ஆண்டு மே மாதம், தும்மும் போதும் முகத்தை துடைக்க அமீரகத்தின் தேசிய பணத்தை பயன்படுத்தி அவமதிப்பில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை கைது செய்தது நினைவு கூறத்தக்கது.