UAE Tamil Web

ஷார்ஜாவில் அதிக சப்தம் எழுப்பிய 500 கார்களை பிடித்த காவல்துறை

ஷார்ஜா காவல்துறையினர் ரேடார் கருவிகள் மூலம் சாலைகளில் அதிக ஒலி எழுப்பிச் சென்ற 510 வாகனங்களை பிடித்துள்ளனர்.

போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் சவுத் அல் ஷைபா கூறுகையில், ஷார்ஜா காவல்துறை குடியிருப்பு இடையூறுகளைக் குறைக்கும் முயற்சியில், அதிகளவிலான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களை பிடிக்க ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ், வாகனத்தில் ஒலியை 95 டெசிபல்களுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 2 ஆயிரம் திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 12 பிளாக் மார்க்குகள் மற்றும் 6 மாதங்கள் வரை வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

ரேடார் அமைப்பு 2019 ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டது. இந்த அமைப்பு அதிநவீன கேமராவுடன் இணைக்கப்பட்ட ஒலி மீட்டரைக் கொண்டுள்ளது. வாகனத்தின் சத்தம் அதிகமாக இருந்தால், கேமராவில் படம்பிடித்து கொடுத்துவிடும். இதன் மூலம் ஓட்டுநருக்கு போக்குவரத்து துறை மூலம் அபராதம் விதிக்கப்படும்.

வாகனத்தை அதிக சப்தத்துடன் ஓட்டுவதால் குடியிருப்பாளர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை தொந்தரவு அடைகிறார்கள். இது குடியிருப்பாளர்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் பல வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிர் சேதங்களை ஏற்படுத்துகின்றனர்” என்று சவுத் அல் ஷைபா கூறினார்.

குடியிருப்பு சுற்றுப்புறங்களில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுனால் 999 என்ற எண்ணான கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு சவுத் அல் ஷைபா தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap