UAE Tamil Web

துபாய் மாணவனை கௌரவித்த காவல்துறை.. எதற்காக தெரியுமா..?

துபாயில் உள்ள அல் குசைஸ் காவல் நிலைய அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளி மாணவனை பாராட்டும் விதமாக கௌரவித்து சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

துபாயில் உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவன் அஜாம் காலித், லுலு ஷாப்பிங் மால் அருகில் கிடந்த பர்ஸை காவல் நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். இதற்காக அல் குசைஸ் காவல் நிலைய அதிகாரிகள் அஜாம்-ஐ பாராட்டும் விதமாக பள்ளிக்குச் சென்று கௌரவித்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தின் துணை இயக்குநர் சயீத் அல் மதானி கூறுகையில், “அஜாம் காலித் நேர்மையைப் பாராட்டியும், சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சான்றிதழை வழங்கப்பட்டது. அஜாம் போன்று மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

இதனை அடுத்து அல் குசைஸ் காவல் நிலையத்திற்கு நன்றிக் கூறிய அஜாம், காவல்துறையின் மரியாதை தனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap