UAE Tamil Web

துபாயில் கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற இளம்பெண் உயிரிழப்பு..!

துபாய், அல் ஜாஃபிலியாவில் உள்ள வீட்டில் கேரளாவைச் சேர்ந்த 20 வயதான ரிஃபா மெஹ்னு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவரது நண்பர் அல்ஃபாலா வினோஜ் கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புகழ்பெற்ற Vlogger-ஆன ரிஃபா மெஹ்னுவுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.  மெஹ்னு அவரது கணவர் மெஹ்னாஸுடன் துபாயில் வசித்து வருகிறார். கணவர் மெஹ்னாஸும் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். இருவரும் ஜோடியாக தங்களது சமூக தளத்தில் உணவு மற்றும் ஃபேஷன் குறித்து விளம்பர பதிவு செய்பவர்கள்.

இந்நிலையில் மெஹ்னு உயிரிழந்தது குறித்து கேரள சமூக ஆர்வலரான அஷ்ரப் தாமரசேரி கூறுகையில், “உடலை கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான கோழிகோடுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துபாய் காவல்துறையின் தடயவியல் அறிக்கைக்காக  காத்திருக்கிறோம். விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என நம்புகிறோம்,” என்று தாமரசேரி தெரிவித்தார்.

கேரளாவில் சமூக வலைதள பிரபலமான ரிஃபா மெஹ்னு இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுப்ஸ்க்ரைபர்களும் யூடியூபில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap