துபாய் EXPO 2020-இல் பங்கேற்க வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
192 நாடுகள் பங்கேற்றுள்ள துபாய் EXPO 2020 கண்காட்சியில் பங்கேற்பதற்காக வருகிற 26 அன்று இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் வருகிறார்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைத்து நிதி வழங்கிட முதல்வர் மு.கஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் & அபுதாபி வாழ் தமி சமூகம் சார்பாக நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் மார்ச் 28 அன்று மாலை 4 மணியளவில் அபுதாபி, இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் உள்ளரங்கில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ் சொந்தங்கள் தங்கள் குடும்பத்தோடு இந்த பாராட்டு விழாவில் கலந்துக்கொள்ளுமாறு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் & அபுதாபி வாழ் தமி சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.