UAE Tamil Web

சாம்சங் வெளியிட்ட அட்டகாசமான மொபைல்கள் – துபாயில் முன்பதிவு தொடக்கம்!

மொபைல் போன் சாம்ராஜ்ஜியத்தின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று சாம்சங். ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டிப் போடும் விதமாக பல புத்தம் புதிய அறிவிப்புகளை சாம்சங் அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஃபோல்டிங் மொபைல் போன்களான Galaxy Z Fold3, Galaxy Z Flip3 ஆகிய 2 மொபைல்களை அறிமுகம் செய்தது. உலகிலேயே IPX8 water-resistance கொண்ட முதல் ஃபோல்டபில் மொபைல் போனை அறிமுகம் செய்து சாம்சங் சாதனை படைத்துள்ளது. இந்த மொபைல் போன்களை வாங்குவதற்கான புக்கிங் துபாயில் தொடங்கியுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Two Galaxy Z Fold3 5G phones, one seen folded from the Back Cover and one seen unfolded with a colorful wallpaper on the Main Screen. The S Pen Fold Edition leans against the folded phone.

செப்டம்பர் 9ம் தேதி வரை சாம்சங் ஸ்டோர்கள், முன்னணி மொபைல் கடைகளில் புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Galaxy Z Fold3’s 256GBன் விலை 6,799 திர்ஹமாகவும் 512GBன் விலை 7,199 திர்ஹமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல Galaxy Z Flip3ன் விலை 128GB 3,799 திர்மஸ்க்கும் 256GB 3,999 திர்ஹம்ஸ்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பங்களுடன் புத்தம் புதிய டிசைனில் ஃபோல்டபில் மொபைல் போனை சாம்சங் வெளியிட்டுள்ள நிலையில் அதனை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

0 Shares
Share via
Copy link