UAE Tamil Web

6 மாத கர்ப்பமாக இருந்த இளம் மருத்துவர் கொரோனாவிற்குப் பலியான சோகம்..!

Dr-Maha-Basheer-

டாக்டர். மஹா பஷீர் 25 வயதேயான இளம் டாக்டர் கொரோனாவிற்குப் பலியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்றவருடம் திருமணம் செய்துகொண்ட மஹா மரணத்தின்போது 6 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது தான் துயரத்தின் உச்சம்.

துபாயில் பள்ளிப்படிப்பை முடித்ததும், இங்கேயே மருத்துவ நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்துள்ளார். அதன்பின்னர் இந்தியா திரும்பிய மஹா கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்திருக்கிறார். இவரது கணவர் டாக்டர். ஷஃபாவர் முகமது தற்போது மருத்துவ முதுகலை (MD) பயின்று வருகிறார்.

ஏப்ரல் மாத மத்தியில் மஹாவிற்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணியாக இருந்த அவர் தான் படித்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துவக்கத்தில் பெரியளவில் அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நாட்கள் செல்லச்செல்ல அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அவரது இறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வயிற்றில் இருந்த அவரது குழந்தை இறந்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

அதேபோல, அவரது மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது. இருப்பினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது. கேரளாவின் தளச்சேரியில் மஹாவின் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் மருத்துவரான மஹாவின் மரணத்தையொட்டி, அவர் பயின்ற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் அவரது ஆசிரியர்கள் ஆகியோர் கண்ணீர் மல்க மஹாவிற்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Dr-Maha-Basheer-
0 Shares
Share via
Copy link