UAE Tamil Web

கேரளா: கணவர் துபாய் செல்லாததால் கர்ப்பிணி மனைவி விஷம் குடித்து தற்கொலை

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை துபாய் போக சொல்லி விஷம் குடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அவினாஷ், ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின் துபாயில் பணிபுரிந்து வந்த அவினாஷ், 3 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றார்.

இந்த நிலையில் அவினாஷின் மனைவி ஸ்ரீலஷ்மி கருவுற்றிருந்தார். கருவுற்ற இருப்பதால் தனது மனைவியோடு இருக்க அவினாஷ் ஆசைப்பட்டு துபாய்க்கு வர தயங்கினார். அவினாஷ் ஊரில் இருப்பது பிடிக்காத மனைவி, “கடன் இருப்பதாலும், குழந்தை பிறந்தால் நிறைய செலவு இருக்கும்” என்று அவினாஷிடம் கூறியுள்ளார்.

அதனால் துபாய்க்கு செல்லுங்கள், குழந்தை பிறக்கும் முன் விடுமுறை கேட்டுவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது 3 மாசம் விடுமுறையில்தான் உள்ளே. கொரோனா காரணமாக செல்ல முடியவில்லை என்று அவினாஷ் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை ஸ்ரீலஷ்மி நம்பினார். ஆனால் அவினாஷ் துபாய் போக விருப்பம் இல்லாமல் பொய் சொன்னது பிறகுதான் ஸ்ரீலஷ்மிக்கு தெரியவந்தது.

இதனால் அவினாஷ் மீது கோபம் அடைந்த ஸ்ரீலஷ்மி, விஷ பாட்டிலை வைத்துக்கொண்டு நீங்கள் துபாய்க்கு செல்ல வேண்டும், இல்லாவிட்டால் வாயில் நான் குடித்துவிடுவேன் என்றார். இதனால் பதறிப்போன அவினாஷ் விரைவில் நான் துபாய் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீலஷ்மியிடம் சத்தியம் செய்தார்.

ஆனால் ஸ்ரீலஷ்மி விஷத்தை தவறுதலாக குடித்துவிட்டார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீலஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

7 Shares
Share via
Copy link