ஷார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் வங்கதேச கர்ப்பிணி பெண்ணும், அவரது ஒன்பது வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அல் காசிமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகள் இரவு 11 மணியளவில் அல் குவைத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணும், அவரது 9 வயதும் மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கும், அவரது 3 குழந்தைகளுக்கும் லேசானது முதல் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகளில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அல் கர்ப் காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகிறது.