அமீரகத்தில் கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு(முன்கள பணியாளர்கள்) சிறப்பு பதக்கங்களை வழங்க நாட்டின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.
தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்களப்பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை அங்கீகரிப்பதற்காக “மனிதநேயத்தின் ஹீரோக்கள்-Heroes of Humanity” என்ற விருதுகள் வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் Pride of the Nation அலுவலகம் ஆகியோரின் பரிந்துரைகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமீரகம் மற்றும் நாட்டு மக்களுக்காக முன்கள வீரர்கள் செய்த உயிர் தியாகத்தை போற்றி பாராட்டும் வகையில் இறந்தவர்களுக்கு இந்த மரியாதை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.