அமீரகத்தின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவை அடுத்து தற்போது புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் மதிப்பிற்குரிய Sheik Muhammed அவர்கள். தற்போது அவர் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்யும் அதே நேரத்திலும் தனது மக்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குகின்றார்.
பொது மசூதியில் பிரார்த்தனை செய்தாலும் சரி, அல்லது ஒரு நிகழ்வில் கவனக்குறைவாக ஒரு சிறுமிக்கு கைகுலுக்க மறந்து பின் அவருக்கு Surprise கொடுக்கும் வகையில் அதே சிறுமியின் வீட்டிற்கே செல்வதென்றால் சரி அவருக்கு நிகர் அவரே என்று கூறலாம்.
இதுகுறித்து மதிப்பிற்குரிய முகமது பின் சயீத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது அங்கு குழுமியிருந்த சிறுவர் சிறுமிகள் புதிய ஜனாதிபதிக்கு கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
— عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019
அப்போது அந்த கூட்டத்தில் இறுதியாக நின்ற சிறுமிக்கு கைகுலுக்க மறந்து அங்கிருந்து சென்றுள்ளார் நமது ஜனாதிபதி முகமது பின் சயீத் அவர்கள். அந்த காணொளியையும் தற்போது ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதை நம்மால் பார்க்கமுடிந்தது.
زرت اليوم الطفلة عائشة محمد مشيط المزروعي وسعدت بالسلام عليها ولقاء أهلها. pic.twitter.com/XY3N3nU6Dd
— محمد بن زايد (@MohamedBinZayed) December 2, 2019
இந்நிலையில் அந்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய அந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நேரடியாக அந்த சிறுமியின் வீட்டிற்கே சென்று அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டு தனது ஆசிகளை வழங்கினார் மதிப்பிற்குரிய நமது ஜனாதிபதி அவர்கள்.
உண்மையில் அரசாங்க வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் மக்களோடு தனது நேரத்தை செலவிட அவர் மறப்பதில்லை. அமீரகத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக கடந்த சனிக்கிழமை அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.