UAE Tamil Web

அபுதாபி இளவரசருடன் தொலைபேசியில் பேச்சு – Expo 2020க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

அமீரகம் – இந்தியா இடையிலான இருநாட்டு உறவு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளார். இருநாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா 2வது அலையின்போது இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்ததற்காக அமீரகத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருநாட்டு உறவு பேணப்பட வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்க உள்ள Expo 2020 கண்காட்சி வெற்றிபெறவும் பிரதமர் மோடி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களிடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆப்கன் நிலவரம் குறித்து பேசிக்கொண்ட பிரதமர் மோடி உலகில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

2 Shares
Share via
Copy link