அபுதாபியின் இளவரசரும், அமீரக ஆயுதப் படையின் துணை தலைமைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆட்சியாளர்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈத் அல்-பித்ர் வாழ்த்துகள். கடவுள் நமது நாட்டுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் அளித்து, பிராந்தியத்திற்கும் உலகிற்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வழங்குவானாக.” என தெரிவித்துள்ளார்.