UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவிற்கு 6 நாட்கள் விடுமுறை – அமீரக அரசு அறிவிப்பு..!

Taraweeh prayers

அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் ஏமிராட்டிசேஷன் இன்று நாட்டின் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் அத்ஹா விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 19 ஆம் தேதிமுதல் ஜூலை 22 ஆம் தேதிவரையிலான 4 நாட்களுக்கு தனியார் துறை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியாளர்களுக்கு இது சம்பளமில்லா விடுப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம், அமீரக அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் நபர்களுக்கான ஈத் அல் அத்ஹா விடுமுறையை அறிவித்தது. அதன்படி, ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதிவரையில் இந்த பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஜூலை 25 ஆம் தேதி அவர்கள் பணிக்குத் திரும்பவேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வார இறுதி விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறையை அனுபவிக்க இருக்கிறார்கள் அமீரக அரசுத்துறை ஊழியர்கள்.

Taraweeh prayers
0 Shares
Share via
Copy link