UAE Tamil Web

அமீரகத்தின் புதிய துணைப் பிரதமராகிறார் ஷேக் மக்தூம் ; அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த துபாய் ஆட்சியாளர் – யார் யாருக்கு என்ன துறை..?

Sheikh-Maktoum-bin-Mohammed-bin-Rashid_

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரக கேபினெட்டில் மாற்றத்தினைக் கொண்டுவந்துள்ளார். அதன்படி மாற்றப்பட்ட அமைச்சரவையின் பட்டியலைக் கீழே காணலாம்.

Sheikh-Maktoum-bin-Mohammed-bin-Rashid_
Image Credit: Gulf News | ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

துபாயின் துணை ஆட்சியாளராக உள்ள ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரகத்தின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துபாய் ஆட்சியாளரின் இளையமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohammad-bin-Hadi-Al-Husseini
Image Credit: gulf news | முகமது பின் ஹாதி அல் ஹுசைனி

முகமது பின் ஹாதி அல் ஹுசைனி – மாநிலங்களுக்கான நிதி விவகாரத்துறை அமைச்சர்.

Abdullah-bin-Sultan-bin-Awad-Al-Nuaimi-
Image Credit: Gulf News | அப்துல்லா பின் சுல்தான் பின் அவாத் அல் நுவைமி

அப்துல்லா பின் சுல்தான் பின் அவாத் அல் நுவைமி – நீதித்துறை அமைச்சர்.

Mariam-Al-Muhairi_
Image Credit: Gulf News | மரியம் பிண்ட் முகமது சயீத் ஹரீப் அல் முஹைரி

மரியம் பிண்ட் முகமது சயீத் ஹரீப் அல் முஹைரி – காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர். முன்னதாக இவர் மாநிலங்களுக்கான உணவு மற்றும் நீர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Abdullah-bin-Muhair-Al-Ketbi
Image Credit: Gulf News | அப்துல்லா பின் முஹைர் அல் கேட்பி

அப்துல்லா பின் முஹைர் அல் கேட்பி – பெடரல் உச்ச சபை விவகாரத்துறை.

Dr.-Abdul-Rahman-Al-Awar_
Image Credit: Gulf News | டாக்டர். அப்துல் ரஹ்மான் அல் அவார்

டாக்டர். அப்துல் ரஹ்மான் அல் அவார் – அமீரக மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர். இவர் தற்போது பெடரல் அரசு மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் (FAHR) தலைமை இயக்குனராகவும் ENOC ஆடிட் பிரிவில் உறுப்பினராகவும் உள்ளார்.

Sheikh-Maktoum-bin-Mohammed-bin-Rashid_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap