29.1 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

இந்தியாவை சேர்ந்த பிரபல அமீரக தொழிலதிபர் துபாயில் மரணம்..!

Joy Arakkal

கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல அமீரக தொழிலதிபர் ‘ஜாய் அரக்கல்’ கடந்த வியாழக்கிழமை அன்று துபாயில் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாய் அரக்கல் துபாய் இன்னோவா சுத்திகரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். 54 வயதான ஜாய் அரக்கல் அவர்களுக்கு மனைவி செலின் ஜாய் மற்றும் இரண்டு குழந்தைகள் (அருண் ஜாய் மற்றும் ஆஷ்லே ஜாய்) உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் 10 ஆண்டு கோல்டு கார்டு விசா வழங்கப்பட்ட இந்தியர்களில் ஜாய் அரக்களும் ஒருவர்.

இவர் கடந்த ஆண்டு கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள மனந்தவடியில் 45,000 சதுர அடி பரப்பளவில் அரக்கல் அரண்மனையை கட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times



error: Alert: Content is protected !!