ஷார்ஜா: முகமது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 21) அனைத்து பொது பார்க்கிங் இடங்களிலும் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், கட்டணம் வசூலிக்கக்கூடிய பார்க்கிங் இடங்களுக்கு இந்த இலவச பார்க்கிங் திட்டம் பொருந்தாது. அதாவது,
அல் ஷுவைஹீன் (Al Shuwaiheen) தெருவில் உள்ள அல் ஹிஸ்ன் – பேங்க் காம்பிளக்ஸ் பகுதி (Al Hisn Street -bank complex),
அல் ஷோயோக் (Al Shoyoukh) பகுதி
கார்னிச் தெரு – இரு புறமும் (Corniche street)
கைஸ் இப்னு அபி சசாஹ் தெரு (Qays Ibn Abi Sa’sa’ah street)
மத்திய சூக் பார்க்கிங் பகுதிகள் (Central Souq parking spaces)
கார்னிச் தெரு – காலித் லகூன் பக்கம் (Corniche street – Khalid Lagoon side)
யூனிவெர்சிட்டி சாலை (University City Road), முவேய்லே வர்த்தக பகுதி.
மஜாஸ் 1, மஜாஸ்2.
மேற்கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா நகராட்சியின் பொதுப் பார்க்கிங் துறை இயக்குனர் அலி அகமது அபு காஸின் (Ali Ahmed Abu Ghazin),” வாகனவோட்டிகள் வீதிமீறல்களில் ஈடுபடுகிறார்களா என்பதனைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபடும். அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் தேவையான பார்க்கிங் இடங்களை வழங்க நகராட்சி வேண்டிய முயற்சிகளை எடுத்துவருகிறது” என்றார்.