UAE Tamil Web

அமீரகத்தில் 3 நாட்கள் விடுமுறை – மீலாது நபியை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்தது அரசு..!

-eid-al-fitr_

நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை அமீரக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை விடப்படும் என அமீரக அரசு மனிதவள மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் வெள்ளி, சனி என மொத்தம் 3 நாட்கள் விடுமுறையை அரசுப் பணியாளர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள். அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அளவில் தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறையானது வழங்கப்படவேண்டும் என அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

ஆகவே, அமீரக தனியார் துறை ஊழியர்களும் நீண்ட விடுப்பைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

-eid-al-fitr_
11 Shares
Share via
Copy link