UAE Tamil Web

“எங்களுடைய அணியைப் பார்த்து பெருமைகொள்கிறேன்” – கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தை விரைந்து அணைத்த வீரர்களைப் பாராட்டிய துபாய் இளவரசர்..!

sheikh hamdan

நேற்று இரவு துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் பிரதான கப்பல் பாதையில் இருந்து கிளம்பத் தயாரான சரக்குக் கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் பயங்கர தீவிபத்தும் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் துபாயின் பட்டத்து இளவரசரும் பிரதமரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டியிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” எனது குழுவினால் பெருமையடைகிறேன்” என இளவரசர் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் துபாய் ஊடக அலுவலகத்தின் இயக்குனர் மோனோ அல் மர்ரி, துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி, துபாய் சிவில் பாதுகாப்புத்துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் ரஷீத் தானி அல் மட்ரூஷி மற்றும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படங்களையும் தனது பதிவில் இடம்பெறச்செய்துள்ளார்.

அதேபோல துபாயின் துணை ஆட்சியாளரான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

துபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்த துணை ஆட்சியாளர், விரைவாக துறைமுகத்தில் பணிகளை மீண்டும் துவங்கிய அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற விபத்து குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்கிய துபாய் ஊடக அலுவலகத்திற்கும் தனது பாராட்டுகளை துணை ஆட்சியாளர் தெரிவித்தார்.

sheikh hamdan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap