36.9 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

அபுதாபி : ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் இந்த இரண்டு பகுதிகளில் பொதுப் பேருந்துகள் இயங்கும்!

bus

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre) ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களுக்கான பொதுப் பேருந்து போக்குவரத்து சேவை குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் அபுதாபி பொதுப் பேருந்து வசதியானது, அல் அய்ன் நகரம் (Al Ain) மற்றும் அல் தஃப்ரா (Al Dhafra) பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 இயக்கப்படும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான தேசிய சுத்திகரிப்பு பணிகள் துவங்கும் வேளையில் இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்படும். இன்டெர் சிட்டி பேருந்துகள் (intercity bus services) உரிய அறிவிப்பு வரும் வரையில் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பேருந்து போக்குவரத்திற்கான கால அட்டவணையை,  ITC யின் இணைய தளமான www.itc.gov.ae வாயிலாகவோ, தகவல் அழைப்பு மையத்தை 80088888 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமாகவோ அல்லது டார்ப் (Darb) ஸ்மார்ட் ஆப் வாயிலாகவோ அறிந்துகொள்ளலாம்.

Abu Dhabi Healthcare Link என்னும் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாக, சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் மாலை 6 மணி முதல் காலை 8 வரை இலவசமாகப் பயணிக்க, Bus On-Demand அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக ITC அளித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈத் விடுமுறை நாட்களிலும் மருத்துவப் பணியாளர்களுக்கான இந்த இலவசப் பயண நடைமுறை தொடரும். கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கும் மருத்துவர்கள் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச போக்குவரத்தின் மூலமாக மருத்துவர்கள் தங்களது வீட்டிலிருந்து பணிபுரியும் இடங்களுக்குச் செல்லலாம் என ITC தெரிவித்துள்ளது.

மற்ற சில பதிவுகள்