அரசு ஊழியர்களை அச்சுறுத்துவது அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று ஃபெடரல் பப்ளிக் பிராசிகியூஷன் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஃபெடரல் தண்டனைச் சட்டத்தின் 248வது பிரிவின் கீழ், ஒரு அரசு ஊழியர் அல்லது பொது சேவை ஒப்படைக்கப்பட்ட தனி நபருக்கு எதிராக அழுத்தம், வன்முறை அல்லது அச்சுறுத்தலைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் தண்டிக்கப்படுவர்.
#قانون #ثقف_نفسك #ثقافة_قانونية #خلك_حكيم #الامارات #الامارات_العربية_المتحدة #النيابة_العامة_الاتحادية#law #legal_culture #PublicProsecution #SafeSociety #UAE #ppuae pic.twitter.com/ewpd6Cal1o
— النيابة العامة (@UAE_PP) October 16, 2020
ஒரு நபர் சட்டவிரோதமாக அரசு ஊழியர் ஒருவரை தனது கடமைகளை செய்யவோ அல்லது தவிர்க்கவோ கட்டாயப்படுத்தும் நேரங்களில், அந்த நபரது நோக்கம் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் அதற்காக குறைந்தபட்சம் 1 வருடம் சிறை தணடனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டங்களை தெரிந்து கொள்ளாமல் சமூக உறுப்பினர்கள் செய்யும் மீறல்களை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுளதாக பப்ளிக் பிராசிகியூஷன் குறிப்பிட்டுள்ளது.