அமீரகத்தின் பொது பள்ளிகளுக்கு இனி வீட்டுப்பாடம் இல்லை.! எப்பொழுது தொடங்கவுள்ளது.?

no homework

கடந்த செவ்வாயன்று கல்வி அமைச்சகம், “எனது உகந்த நேரம்” (“My Optimum Time”) என்னும் புதிய முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த முயற்சி வீட்டுப்பாடங்களை நீக்குவது மற்றும் ஒரு மாணவரின் நேரத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

அடுத்த வாரம் தொடங்கும் இந்த புதிய முயற்சி, மாணவர்களின் பாடங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் சமநிலையை (Balance between student’s lessons and activites) ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. அமைச்சகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பொதுப் பள்ளிகளுக்கு இது பொருந்தும்.

அரபு, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் 90 நிமிட அமர்வுக்கு இடைவிடாமல் இரண்டு தொடர்ச்சியான அமர்வுகளை இணைப்பது (merging two continuous sessions without a break) இந்த முயற்சியில் அடங்கும் என்று அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செயல்பாட்டுத் துறையின் செயல் நிர்வாக இயக்குனர் லுப்னா அல் ஷம்சி கூறுகையில் “இந்த புதிய முறையின் கீழ், பள்ளி நேரங்கள் பாதிக்கப்படாது. வழக்கம் போல் அனைத்து விஷயங்களும் நடைபெறும். மேலும் இந்த முயற்சி துபாயில் 23 பள்ளிகள் மற்றும் அபுதாபியில் 233 பள்ளிகள் உட்பட 256 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 16 முதல் அமல்படுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

“” எனது உகந்த நேரம்” முயற்சியில் ஆசிரியர்களுக்கான மாலை கற்றல் மையங்களைத் திறப்பதும் அடங்கும். அங்கு மாணவர்கள் அச்சிடப்பட்ட மற்றும் மின்னணு மூலங்களிலிருந்து (printed and electronic sources) நீண்ட காலத்திற்கு பயனடைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்” என்றும் கூறினார்.

வகுப்பில் மன தூண்டுதலுக்கு ஐந்து நிமிடங்கள், பாடம் திறன்களைப் பயன்படுத்துவதற்கு 50 நிமிடங்கள் மற்றும் மீதமுள்ள நேரம் பல்வேறு நடவடிக்கைகளாகப் பிரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த புதிய முயற்சி மாணவர்களின் கல்வித் தேவைகள் அல்லது படிப்புகள் மற்றும் அவரது அன்றாட குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும். மேலும் இது அவர்களது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் இன்றியமையாத பகுதியாகும். இந்த புதிய அமைப்பு மாணவர் கழக நடவடிக்கைகளுக்கு அதிக நேரத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகின்றது.

Loading...