(DHA) துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துருப்பதாவது,
துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அறிகுறி எதுவுமின்றி கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எந்தவிதமான அறிகுறியும் இருக்கக்கூடாது.
இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த விதிமுறையானது கடந்த 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.