அமீரகத்தில் நடைப்பெற்ற திருக்குர்ஆன் விழாவில் மஜக மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்பு..!

அமீரகத்தில் திருக்குர்ஆன் விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்பு!

ஐக்கிய அரபு அமீரகம் ,அல் அய்னில் Indian Social Center சார்பில் திருக்குர்ஆன் ஒதும் போட்டி நடைப்பெற்றது. இந்த ISC அமைப்பு என்பது ஐக்கிய அரபு அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய பொது அமைப்பாகும். இதில் கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலத்தை சேர்ந்த பல்வேறு இனத்தவரும், மொழியினரும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அமைப்பு ரமலான் தோறும் குர்ஆன் ஓதும் போட்டி நிகழ்ச்சியை இந்திய சிறுவர்- சிறுமியரிடையே நடத்தி வருகிறது. சென்ற ஆண்டை தொடர்ந்து இவ்வாண்டும் இதை தொடங்கி வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MடA அவர்கள் உரையாற்றினார்.

அவர் கூறுகையில் :

இன்று பயங்கவாதமும், வெறுப்பும், வன்முறைகளும் உலகை மிரட்டுகின்றன. மதங்கள், இனங்கள் இடையே பதற்றம் பற்றுகின்றது. இணக்கம் குறைந்து வருகிறது. அதை ஒழுங்குப்படுத்த வேண்டிய காலம் இது.

இந்த நிலையில் புனித ரமலானில் , திருக்குர்ஆன் ஒதும் போட்டியை ISC நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. குர்ஆன் அன்பை போதிக்கிறது. நேசத்தை வலியுறுத்துகிறது. இணக்கத்தை போற்றுகிறது.

குர்ஆனின் போதனையை புரிந்து வாழ்பவர்கள் உலக அமைதிக்கான பணிகளையே முன்னெடுப்பார்கள். சகிப்புத்தன்மையே குர்ஆனில் சாரம்சமாகும். இது அனைவருக்குமான வேத நூல். எல்லோருக்குமான பொது அறிவு நூல். இதை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அனைவரும் வாசிக்க வேண்டும்.

இங்கு இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்தவர்கள் என அனைவரும் ஒரு நல்ல நிகழ்வில் கூடியுள்ளோம். இது தான் நம் பண்பாடு. இந்த சகோதரத்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

வற்றாத ஜீவநதிகள், நீண்ட மலைத்தொடர்கள், உயர்ந்த கட்டிடங்கள் ஆகியவற்றையெல்லாம் விட , விலை உயர்ந்தது, இந்த உலகில் அன்பு தான். அதை உலகிற்கு புரிய வைக்க வேண்டும். மானுடம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

அமீரக அரசு சகிப்புத்தன்மை ஆண்டாக 2019 ஐ அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இங்கு போப் ஆண்டவர் வருகை தந்துள்ளார். அது போல் கோயில் கட்ட அமீரக அரசு இந்துக்களுக்கு இங்கு இடம் வழங்கியுள்ளது. இது போன்ற சமூக புரிதல்கள் அமீரகத்தின் சிறப்புகளாக உள்ளது.

நான் இரண்டாம் ஆண்டாக இந்நிகழ்வில் பங்கேற்கிறேன். இந்த தொடர் வாய்ப்பை தந்தமைக்காக ISC அமைப்புக்கு நன்றி கூறுகிறேன். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக மனதார பாராட்டுகின்றேன், என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ISC தலைவர் முஸ்தபா S . முபாரக், செயலர் IR முகைதீன், பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் சசி ஸ்டீபன், ஜிம்மி குட்டி, அல் அய்ன் ஜூனியர் ஸ்கூல் நிறுவனர் முகம்மது அர்ஷத்,,MKP அமீரக துணைச் செயலர் ஹஸ்ஸாலி, அல் அய்ன் மாநகர MK P செயலர் இம்ரான் ஆகியோரும், அமீரக IKP செயலர் J ஷேக்தாவூத் உட்பட 50 க்கும் மேற்பட்ட MKP சகோதர்களும் பங்கேற்றனர். இரவு 11 மணிக்கு போட்டிகள் தொடங்கியது.

இந்த விழாவில் பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட 300 க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.