இந்தியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கே சென்ற ராகுல் காந்தி.!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேற்று இரவு துபாய் வந்தடைந்தார். அப்போது ஏராளமான மக்கள் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தி ஜேபில் அலி(Jebel Ali) தொழிற்சாலை பகுதியில் வசிக்கும் இந்தியர்களின் விடுதிக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 துபாய் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ராகுல் காந்தி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

Loading...