UAE Tamil Web

அமீரகத்தில் தொடர்ந்து 3 வது நாளாக கனமழை: மக்கள் மகிழ்ச்சி..!

Rain uae

அமீரகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மழை பெய்திருக்கிறது. இந்த வாரத்தின் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மழை பொழியும் என தேசிய வானிலை ஆய்வுமையம் முன்பே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று துபாயின் ஹத்தா, ராஸ் அல் கைமாவின் வாதி அல் குர், மஸாஃபி – அஸ்மா சாலை, கோர்ஃபக்கான் மற்றும் புஜைரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கனமழையினால் வெள்ளம் உருவாகும் இடங்களில் இருந்து மக்கள் விலகியே இருத்தல் வேண்டும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

ஆனால், அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நாளை பகல் வேளையில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.