UAE Tamil Web

டிசம்பர் 18: அமீரக மசூதிகளில் சிறப்பு மழை தொழுகை(சலாத்-அல்-இஸ்திஸ்கா) நடைபெற உள்ள நேரங்கள் அறிவிப்பு..

rain

அமீரகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் ஜும்மா தொழுகை துவங்கியுள்ள நிலையில் வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 18 அன்று சலாத்-அல்-இஸ்திஸ்கா எனப்படும் சிறப்பு மழை தொழுகைகள் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு ஜனாதிபதி பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எமிரேட்களில் சலாத்-அல்-இஸ்திஸ்கா தொழுகை நடத்தப்படும் நேரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சிறப்பு மழை தொழுகை நடைபெறும் நேரங்கள்:

அபுதாபி: மதியம் 12:12

துபாய்: மதியம் 12:09

ஷார்ஜா: மதியம் 12:08

அஜ்மான்: மதியம் 12:08

உம் அல் குவைன்: மதியம் 12:07

ராஸ் அல் கைமா: மதியம் 12:06

கோர் ஃபக்கன்: மதியம் 12:04

அல் அய்ன்: மதியம் 12:07

அல் தஃப்ரா: மதியம் 12:15

அமீரக மசூதிகளில் இந்த சிறப்பு தொழுகைகள் ஜும்மா தொழுகைக்கு 10 நிமிடங்களுக்கு முன் நடத்தப்பட உள்ளது. நிலம் மழையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாரம்பவெள்ளியன்று ரியத்திற்கு ஏற்ப இந்த மழை பிரார்த்தனை நடைபெறும்.

rain
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap