அமீரகம் முழுவதிலுமுள்ள மசூதிகளில் மழை வேண்டி தொழுகை நடத்தும்படி அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாளை அமீரகம் முழுவதிலும் இந்த மழை தொழுகை (சலாத் அல் இஸ்திஸ்கா) நடைபெற இருக்கிறது. தொழுகை நடைபெறும் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- அபுதாபி: மதியம் 12 மணி
- துபாய்: காலை 11.56 மணி
- ஷார்ஜா: காலை 11.55 மணி
- அஜ்மான்: காலை 11.54
- உம் அல் குவைன்: காலை 11.54
- ராஸ் அல் கைமா: காலை 11
- கோர் ஃபக்கான்: காலை 11.51
- அல் அய்ன்: காலை 11.54
- அல் தஃப்ரா: மதியம் 12.02
மேற்கண்ட நேரங்களில் மக்கள், மழை வேண்டி அல்லாவிடம் பிரார்த்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 2020, 2017, 2014, 2011 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழைத் தொழுகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
