துபாயில் புதிய ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ; தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..!!

துபாய் பர் துபாய் பகுதி ரஜினி பெயரில் ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதை பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து நிர்வாகித்து வருகின்றனர்.

இந்த உணவகத்தில் ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள், ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகத்தின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது.

இந்த உணவகம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்கிறார்கள்.