UAE Tamil Web

மலை உச்சியிருந்து சறுக்கிய நபர் – கயறு மூலமாக மீட்ட அமீரக பாதுகாப்புப்படை..!

RAK-mountain-rescue-750x450

ராஸ் அல் கைமாவின் சிவில் பாதுகாப்புப்படை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை காலை 07:25 மணிக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. அதில் ஜெபல் ஜெய்ஸ் மலைப்பகுதியில் அரபு நபர் ஒருவர் (30) காயத்துடன் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் சம்பந்த இடத்திற்கு விரைந்தார்கள். மலை முகட்டில் உடற்பயிற்சி செய்யும்போது சறுக்கியதால், மோசமான பகுதியில் விழுந்த நபரை கயறு மூலமாக வீரர்கள் மீட்டிருக்கின்றனர்.

உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புப்படை இயக்குனர் பிரிகேடியர் முகமது அல் ஸாபி,” அல் திக்தகா பாதுகாப்புப்படை நிலையத்தைச் சேர்ந்த வீரர்களின் உதவியுடன் இந்த மீட்புப்பணி வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் போதிய பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்வது அவசியம். மேலும், காவல்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்கவேண்டும்” என்றார்.

RAK-mountain-rescue-750x450
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap