UAE Tamil Web

துபாய்: ரமலானை முன்னிட்டு கபே, உணவகங்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம்..!

restaurant

துபாயில் உள்ள உணவகங்கள், கபே, ஷிஷா மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 4 மணியுடன் மூடப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதிமுதல் இந்நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.

துபாய் நகராட்சியின் சமீபத்திய அறிவிப்பின்படி, உணவகங்கள் அதிகாலை 3 மணிக்குமேல் உணவு ஆர்டர்களை ஏற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.

தீவிர பரிசோதனைகள் இருக்கும் எனவும், கொரோனா விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துபாய் நகராட்சி எச்சரித்துள்ளது.