UAE Tamil Web

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நேரத்தில் உணவு பரிமாற, ஷிஷா ஆகியவற்றிற்குத் தடை – உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதித்த துபாய் அரசு..!

Dubai Restaurant week

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நேரங்களில், உணவகங்களின் வெளிப்புறத்தில் உணவுகளைப் பரிமாறவும் ஷிஷா உபயோகிக்கவும் தடை விதித்துள்ளதாக துபாய் பொருளாதார மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த காலகட்டத்தில் உணவு டெலிவரி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் பொருளாதார மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உணவகங்களின் வெளிப்புறத்தில் உணவுகளை பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உணவு டெலிவரி சேவைகள் வழக்கம்போல இயங்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, பொதுவாக நோன்பு இருக்கும் நேரமான காலை 4.20 மணிமுதல் மாலை 6.45 மணிவரையிலும் உணவகத்தின் வெளிப்புறத்தில் ஷிஷா உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இப்தாருக்குப் பிறகு காலை 4 மணிவரையில் ஷிஷா உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துபாய் பொருளாதார மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், ரமலான் காலத்தில் உணவு வழங்க தனியாக உரிமம் பெறத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தது.

அதேபோல, உணவகங்களில் உணவு பரிமாறப்படும் பகுதியை திரைச்சீலை கொண்டு மூடவேண்டிய அவசியமில்லை எனவும் ஆணையம் தெரிவித்திருந்தது. முன்னதாக, சாலையில் செல்பவர்களுக்கு தெரியாத வண்ணம் உணவு பரிமாறப்படும் இடங்கள் திரைச்சீலையால் மூடப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dubai Restaurant week
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap