UAE Tamil Web

மாடங்கள் இல்லாத புது வடிவிலான மசூதியைத் திறந்தது அபுதாபி..!

MOSQUE

அபுதாபியின் யாஸ் ஐஸ்லேண்டில் அமைந்துள்ள யாஸ் பே (Yas Bay) பகுதியில் புதிய மசூதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான மசூதிகளில் அமைக்கப்படும் குவிமாடங்கள் இல்லாமல், கட்டப்பட்டுள்ள இந்த மசூதியை மிரால் மற்றும் இஸ்லாமிய விவகார மற்றும் ஆஸ்திக்கான தலைமை ஆணையம் திறந்துள்ளன.

நவீன இஸ்லாமிய கட்டிடக்கலையின் அம்சமாக கருதப்படும் இந்த மசூதியில் குவி மாடங்களுக்குப் பதிலாக, கிடைமட்ட மாஷ்ரிபியா பேனல்ஸ் (Mashribiya panels) பயன்படுத்தப்பட்டுள்ளன.

Mashribiya panels என்பது வலையமைப்புகளால் செய்யப்பட்ட பிரேம் போன்றதாகும். மசூதி முழுவதும் பொருத்தப்பட்டுள்ள இந்த பேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மசூதியில் 800 பேர் தொழுகை நடத்தலாம். ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித்தனியே தொழுகை நடத்த ஹால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாஸ் ஐஸ்லேண்டில் 12 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் உருவாக்கப்பட்ட யாஸ் பே பகுதியின் அழகு இம்மசூதியின் வருகையினால் கூடுதல் செழிப்படைந்துள்ளது என்றே சொல்லலாம்.