UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு 14 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை போனஸாக வழங்குவதாக துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ரமலானை முன்னிட்டு துபாயைச் சேர்ந்த டாக்ஸி உரிமையாளர்களுக்கு 14 மில்லியன் திர்ஹம்ஸ் போனஸை அறிவித்திருக்கிறார்.

துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்காக தங்களது டாக்சிக்களை வழங்கியிருப்போருக்கு இந்த போனசானது கிடைக்க இருக்கிறது. மொத்தமாக 2020 ஆண்டுக்கான நிலுவைத் தொகையும் இந்த போனஸும் மொத்தம் 2,833 டாக்ஸி உரிமையாளர்களுக்கு அளிக்க இருக்கிறது துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).

RTA வின் தலைமை இயக்குனரும் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவருமான மட்டார் முகமது அல் தயேர் இதுகுறித்துப் பேசுகையில்,”ஷேக் முகமது அவர்களின் பெருந்தன்மைக்கு நன்றி. ரமலான் நேரத்தில் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஆட்சியாளர் அறிவித்த பல்வேறு திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். நிலையான ஊதியம் பெறும் மற்றும் பின்தங்கிய மக்களுக்காகவே இத்திட்டத்தினை ஆட்சியாளர் அறிவித்திருக்கிறார். மக்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாடு ஒருபுறம் இருந்தாலும் சமூக உறுதிப்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலும் இத்திட்டத்தை ஷேக் முகமது அறிவித்திருக்கிறார்” என்றார்.

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum
0 Shares
Share via
Copy link