UAE Tamil Web

அமீரகம்: ஈத் அல் பித்ர் பண்டிக்கைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

eid-al-fitr,-uae,-public-holdiays,-coronavirus,-covid19,-ramadan

அமீரகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்கியது. தினமும் 14 மணி நேரம் நீடிக்கும் நோன்பானது அன்றைய அந்தியோடு நிறைவுபெறுகிறது.

ஈத் அல் பித்ர் (நோன்புப் பெருநாள்) விடுமுறை எப்போது?

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதத்தின் இறுதி நாள் ஈத் அல் பித்ர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி போலல்லாமல், பிறை தென்படுவதை வைத்தே மாதங்களின் துவக்கமும் முடிவும் இஸ்லாத்தில் கணக்கிடப்படுகிறது.

அமீரக அரசின் விடுமுறை நாட்களின் பட்டியலில் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷாவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடித்தால் விடுமுறை எப்படி விடப்படும் என்பதைக் கீழே காணலாம்.

ரமலான் 29 நாட்கள் நீடித்தால்: 4 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 14 ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) வரை.

ரமலான் 30 நாட்கள் நீடித்தால்: 5 நாட்கள் விடுமுறை விடப்படும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 15 ஆம் தேதிவரை (சனிக்கிழமை) வரை.