UAE Tamil Web

அமீரகத்தில் ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் இந்த தினத்திலா..?

அமீரகத்தில் புனித ரமலான் மாதம் ஏப்ரல் 2, 2022 அன்று தொடங்க வாய்ப்புள்ளதாக சர்வதேச வானியல் மற்றும் விண்வெளி ஆணையத்தின் ஒன்றிய உறுப்பினர் இப்ராஹிம் அல்-ஜர்வான் தெரிவித்துள்ளார்.

ஹிஜ்ரி ஆண்டின் 8 வது மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமிய ஆண்டின் 6 வது மாதமான ஜுமாதுல் ஆஹிர் ஜனவரி 4, 2022 செவ்வாய் அன்று தொடங்கும் என தெரிவித்த அல்-ஜர்வான், இன்னும் ரமலானுக்கு மூன்று மாதங்கள் உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நோன்பு பெருநாள் திங்கள்கிழமை மே 2, 2022 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் ஷவ்வால் பிறை 3 வரை பெருநாள் விடுமுறையாக அமைய வாய்ப்புள்ளது.

இத்தகைய தினத்தில் ரமலான் நோன்பு தொடங்க வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், பிறையை கண்டப்பின் தான் சரியான தேதியை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap