UAE Tamil Web

ஷார்ஜாவில் அதிரடியுடன் துவங்கும் ரமலான் மாத FESTIVAL OFFER!

ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறையான (SCCI) ரமலானை முன்னிட்டு 32வது ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலை நடத்தவுள்ளது.

அரசுத் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா 33 நாட்கள் நடைபெற இருக்கிறது, ஏப்ரல் 2 அன்று தொடங்கி மே 4, 2022 அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் செய்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அற்புதமான சலுகைகள், உற்சாகமான தள்ளுபடிகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலின் 32வது பதிப்பு, “ஷார்ஜா ஆஃபர்ஸ்” என்ற சலுகையை SCCI அறிமுகப்படுத்தி உள்ளது.

ஷார்ஜாவின் இந்த ரமலான் ஃபெஸ்டிவல் பழமையான வணிக நிகழ்வாகும். இது ஆண்டுதோறும் பல சந்தைப்படுத்தல், பொழுதுபோக்கு, பாரம்பரியம், வரலாற்று, கலை மற்றும் மத நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap